அறிவின் அழகு, Wi-Fi யின் தாய்: ஹெடி லாமர்!

அந்த பிரபல கவர்ச்சி நடிகை முன் பெரும் செய்தியாளர் கூட்டம் பலாப்பழத்தை ஈக்கள் மொய்ப்பதை போல் திரண்டிருந்தது. இளசு முதல் பழசு வரை அத்தனை பேரின் கனவுகளையும் அவள் ஆக்கிரமத்திருந்தாள். அவள் சொல்லப்போகும் ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த கூட்டம் ஏங்கிக் கொண்டிருந்தது.கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மின்னல் வேகத்தில் பதில் வந்தது. சுருக்கென்றும், நறுக்கென்றும் பதில் வந்து விழுந்தது. கேள்விகள் அவளுக்கு புதிதல்ல.

புன்னகை மாறாது எல்லா கேள்விகளையும் பொறுமையோடு எதிர்கொண்டாள்.

அமுதம் இதழ் நிருபர் செந்தில் அவளை மடக்க நினைத்தார். “மேடம், நீங்கள் இன்றைய இளைஞர்களின் கனவுக்கண்ணி. ஒருவேளை இந்த கலைத்துறைக்கு வராவிட்டால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?

“சமூகத்தின் முன்னேற்றம் ஒன்றே என் நோக்கம். ஒருவேளை நான் திரைக்கு வராவிட்டால் இந்நேரம் ஒரு அறிவியல் விஞ்ஞானியாக உலா வந்து, மனித சமூகத்திற்க்காக பாடுபட்டுக்கொண்டிருப்பேன்”

மொத்தக்கூட்டமும் ஆர்ப்பரித்தது. எல்லாக் காலத்திலும் தன் இருப்பை காட்டிக்கொள்ளவும், மார்கெட் ஏற்றிக்கொள்ளவுமான உத்தி இது. இந்த பேட்டியை கண்ட நிரிபருக்கும் தெரியும், படிக்கும் வாசகனுக்கும் தெரியும் – இது அதீத பொய்யெனவும், இயலாத கற்பனையெனவும்.ஆனால் இதையெல்லாம் ஒரு கனவு நாயகி தவிடுபொடியாக்கி சென்றிருக்கிறாள். தொழில் முறையில் அவள் கவர்ச்சி நாயகி. ஆனால் திரைக்கு பின்னால் அவள் ஒரு அறிவியல் மேதை. நீங்கள் இன்று பயன்படுத்தும் அனைத்து நவீன தொலைதொடர்பு நுட்பத்திற்கும் விதிகளை அடிகோலிட்டவள்.

அவள் பெயர்: ஹெடி லாமர்! (Hedy Lamarr)

ஹெடி லாமர் ஒரு ஆஸ்ட்ரோ-ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க நடிகை. ஹாலிவுட்டின் பொற்காலத்தின் போது அவர் திரைப்பட நட்சத்திரமாக இருந்தார். செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு சுருக்கமான ஆரம்பகால திரைப்பட வாழ்க்கைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய எக்ஸ்டசி (Ecstasy) உட்பட, அவர் தனது முதல் கணவரான ஃபிரிட்ஸ் (Fritz), ஒரு பணக்கார ஆஸ்திரிய வெடிமருந்து உற்பத்தியாளரிடமிருந்து தப்பித்து, ரகசியமாக பாரிஸுக்குச் சென்றார்.

1942 ஆம் ஆண்டில், அவரது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில், லாமர் பொழுதுபோக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு துறையில் அங்கீகாரம் பெற்றார். அவளும் அவளது நண்பரான இசையமைப்பாளருமான ஜார்ஜ் ஆந்தீலும், ரேடியோ சிக்னலிங் சாதனம் அல்லது “ரகசிய தகவல் தொடர்பு அமைப்பு” (Secret Communications System) பற்றிய யோசனைக்கான காப்புரிமையைப் பெற்றனர். (US Patent No. 2,292,387 )

இது ரேடியோ அலைவரிசைகளை மாற்றும் வழிமுறையாகும். இதனால் எதிரிகளால் செய்திகளை Decoding செய்வது இயலாமல் போகும். செய்தி இரகசியமாக கடத்தப்படும் இரண்டாம் உலகப் போரின் போது, ரேடியோ-வழிகாட்டப்பட்ட டார்பிடோக்களின் நெரிசலைத் தடுப்பதற்கான வழிமுறையாக, ஜார்ஜ் ஆன்தீலுடன் இதை உருவாக்கினார். டார்பிடோ- கப்பல்களைக் குறிவைக்கும் ஒரு வகையான நீருக்கடியில் செல்லும் ராக்கெட் போன்ற ஆயுதம் முதலில் ஜேர்மன் நாஜிக்களை (German Nazi’s) தோற்கடிக்க வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, இராணுவ தகவல் தொடர்பு மற்றும் செல்லுலார் போன்கள் இரண்டின் பாதுகாப்பையும் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாக மாறியது.

ஹெடி லாமரின் Frequency-hopping spread spectrum communication பதிப்பு நவீன Wi-Fi, CDMA, GPS மற்றும் புளூடூத் ஆகியவற்றிற்கான அடித்தளத்தை அமைத்தது.

லாமர் தனது தகவல்தொடர்பு கண்டுபிடிப்பிற்காக உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை, ஏனெனில் அதன் பரவலான தாக்கம் பல தசாப்தங்களுக்குப் பிறகு புரிந்து கொள்ளப்படவில்லை.

1950 களில் தனியார் நிறுவனங்கள் CDMA எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்த போது லாமரின் காப்புரிமை மீண்டும் வெளிப்பட்டது. லாமரின் முறை செல் நெட்வொர்க்குகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் வைபை ஆகியவற்றால் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

1997 ஆம் ஆண்டில், லாமர் மற்றும் ஆன்தீல் ஆகியோர் எலக்ட்ரானிக் பிரான்டியர் பவுண்டேஷன் (EFF) முன்னோடி விருதுடன் கௌரவிக்கப்பட்டனர். அதே ஆண்டில் லாமர் கண்டுபிடிப்புகளுக்கான “ஆஸ்கார் விருதுகள்” என்று கருதப்படும் BULBIE™ Gnass Spirit of Achievement விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.

இத்தகைய சாதனை லாமரை “Wi-Fi யின் தாய்” என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

This entry was posted in movie, photography, technology and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


× three = 6