பயணங்கள் தொடரட்டும்: 23+23=46!

International Journey

  1. Travel more. Journey well
  2. Check-in limit – 2 x 23KG/luggage
  3. New Arrival – New world
  4. Collection of  life books
    • 2 copies – Mighty Mom secrets Vs Dyno Dad experiences
  5. Hot sample picks
    • Communication Alphabets – ABC’s
    • Making food & processing energy
    • Enemies everywhere – Fight & Defend
    • Much more…
  6. Worries from wears & tears
  7. Mitosis Engineers & co. – Universe’s best copier
    • Story copier – Repeated Replication
    • Keep the original ; Make no mistake
    • Boring books – repeated pages
  8. Meiosis Engineers & co. – Universe’s best recombinator
    • Story shuffler  – Renowned Recombination
    • Crossing Over
    • Independent assortment – Mix the colors
  9. Reading together – Beauty of Unity
  10. Gift for my kid (1 in 70 trillion)

Travel more. Journey well

வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க. உள்ளூர்லே இருந்தா என்ன பண்ணுவ? வெளியில நாலு இடத்துக்கு போகனும். புது முகங்கள பாக்கனும். அந்தா இந்தா வருசம் முப்பதுக்கு மேல ஆயிடுச்சு. இத்தன நாளா வீட்டு நிழலிலே இருந்தாச்சு. இனிமேல் வேலைக்காகது. நெருங்கி வருது: என்னுடைய பயணம், எனக்கான உலகம்.

New Arrival – New world

விசாவும் டிக்கட்டும் தயார்.பார்க்காத ஊர். தெரியாத முகங்கள். புதிய அனுபவம்.புதிய உலகம். நானே ஒரு புதிய அவதாரம்.வாழ்வின் மிக முக்கிய பயணம். மூட்ட முடுச்ச கட்டனும்.

Check-in limit – 2 x 23KG/luggage

முதல் முறையா வெளிநாட்டுப்பயணம். மறுபடியும் மறுபடியும் விசாரிச்சதில்ல விமான சேவை ஆளு கடுப்பாகியிருப்பார். வெறும் 23 கிலோதானாம் ஒரு பெட்டிக்கு. 2 பெட்டி கொண்டுபோலாம். ஆக மொத்தம் 46தான், நான் எடுத்துட்டு போகலாம். இந்த 46க்குள்ள எனக்கு தேவையானதெல்லாம் நான் கட்டனும்.

23 கிலோ பெட்டிக்குள்ள எப்படி என் பயண தேவைகள் அடங்கும்? என் கவலையெல்லாம் வீட்டுக்கு ஒரு பொருட்டே இல்லை. எதை பத்தியும் கவலைபடாதே. அதான் 2 பெட்டி இருக்குல்ல. அழகா அடிக்கிடலாம். பொறுப்பான அப்பாவோ, உனக்கு தேவையானதெல்லாம் இந்த 23க்குள்ள நான் அடுக்கிவைக்கிறேன். அன்பு அம்மாவும் பதிலுக்கு இன்னொரு பெட்டியில நானும் என் பங்குக்கு 23அடுக்கி வைச்சுட்டாங்க.

என்ன ஒன்னு, ஓரு condition, பெட்டிய புது ஊர்ல போயி திறந்து பாரு.

ஒரு வழியா பயண நாளும் வந்தாச்சு. 2 பெட்டியோட நானும் கிளம்பியாச்சு. விமான நிலையத்துல 23 கிலோ தானானு கறாரா எடை நிறுத்தி அளந்தாச்சு.

Collection of  life books

மிக நீண்ட பயணம். வெற்றிகரமான பயணம். புது ஊர். புது குடியிருப்பு. ஆர்வமிகுதி. அம்மாவோட பெட்டி திறந்து பார்த்தேன்.

2 copies – Mighty Mom  Vs Dyno Dad (secrets+experiences)

23 புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அளவு. ஒரு புத்தகத்துல 1700 கதைகள். ஒன்னுல வெறும் 200 கதைகள். இன்னொன்னுல 3000 கதைகள். சரி, அப்பாவோட பெட்டி திறப்போம். அதுல என்னென்ன இருக்குன்னு பார்ப்போம்னு பார்த்தா மறுபடியும் அதே, 23 புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் முதல் பெட்டியில இருந்த அதே அளவு.அதே 1700  கதைகள். அதே 200 கதைகள்.அதே 3000 கதைகள். இப்படி 46 புத்தகங்கள். ரெண்டு ரெண்டா!

Hot sample picks

எதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிப்போம். அம்மா பெட்டியில ஒரு புத்தகம். Communication. நமக்கு பிடிச்ச title. நேரா 26வது கதை. Teaching You English Alphabets: A-Apple B-Ball C-Cat D-Dog

சரி , இப்ப அப்பா புத்தகத்தை பார்போம். அதே Communication 26வது கதை. Teaching You English Alphabets: A-Apple B-Ball C-Car D-Duck

கிட்டத்தட்ட ஒன்னுதான்; ஆனா வேற வெளிப்பாடு அல்லது விளக்கம். English Alphabets சொல்லிக்கொடுப்பது தான் இந்த கதையின் குறிக்கோள். அல்லது தேவை.

இப்படி ஒவ்வொரு புத்தகமும் ஒரு பெரிய தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்புகுள்ளும் நூற்றுகணக்கில் , ஆயிரக்கணக்கில் கதைகள்/செய்திகள்/குறிப்புகள்.

வராத விருந்தினர் வந்தால் என்ன செய்வது, நோய் வாய்பட்டால், உணவு தேடுவது, பாதுகாப்பு – இப்படி எல்லாம்!

Communication , Making food & processing energy , Enemies everywhere – Fight & Defend & much more.

இந்த புதிய இடத்துல நான் வாழ, தற்காத்துகொள்ள எல்லா குறிப்பும் அந்த 23 புத்தகத்தில் தெளிவா இருக்கு.

ஆக அம்மாவும் அப்பாவும் கொடுத்த புத்தகங்ளின் கதைகள் ஒன்றுதான். நோக்கமும் ஒன்றுதான். ஆனாலும் சொல்லிய முறையிலும் செய்தியிலும் சிறுசிறு வேறுபாடு.

அந்த கடைசி புத்தகம் மட்டும் கொஞ்சம் வேற வேற type. சொல்றேன் அப்புறம்!

தினம்தினம் படிக்கலாம்னு ஒரு திட்டம்! 1990 ஆரம்பிச்சது. எப்படியும் 15 வருசம் ஆவது ஆகும், 2005குள்ள முடிச்சுரனும். படிக்க படிக்க நேரம் போனதே தெரியல. பத்து வருசம், அதாவது June 26, 2000 லே ஓரளவு முடிச்சாச்சு. நடுவுல கொஞ்சம் கொஞ்சம் அப்புறம் படிக்கலாம்னு தள்ளிப்போட்டதையும் சேர்த்து April 2003 மொத்தத்தையும் படிச்சாச்சு.

பொதுவா எல்லா கதையுலும் 85-95% புரிஞ்சிருச்சு! கதைகளின் so far summary Indexல்.

Worries from wears & tears

நாளாக நாளாக பெட்டியில இருக்கிற புத்தகத்துக்கு வயசு ஏறுது. பழைய புத்தகம் கிழிய ஆரம்பிக்கிது. ஒரே கவலை. என்ன செய்லாம் ?

அய்யோ என்ன செய்றது? இந்த புத்தகமெல்லாம் ஆயுள் முடிஞ்சா என்னோட கதி?

Mitosis Engineers & co. – Universe’s best copier

அப்புறம்தான் ஒரு நாள் தெரிஞ்சது. இந்த பிரச்சனைக்கான தீர்வும் ஒரு புத்தக் தொக்குப்புகுள்ளே இருக்கு.

Story copier – Repeated Replication

அவங்கதான் இந்த universeலே சிறந்த copier. Xerox copierயெல்லாம் சும்மா. மெட்டோசிஸ் copierல 46புத்தகத்தையும் ஒரு மூட்ட கட்டி உள்ள கொடுத்தா அதே மாதிரி 2 செட் தயார் செஞ்சு வெளிய கொடுக்கும்.

ஒரு மூட்டைக்கு இரண்டு மூட்டை. ஒன்ன ரெண்டாக்கும்.

இருக்கிற 46 புத்தகமும் அப்படியே புத்தம் புதுச ரெண்டு Set . அற்புதம்.

Keep the original; Make no mistake :

ஒரு சின்ன பிசிறு,பிழை கூட இருக்காது. அவ்வளவு நேர்த்தி. அவ்வளவு துல்லியம்.தொழில்ல அவ்வளவு சுத்தம். இனி எனக்கு கவலையே இல்லை. எப்ப வேண்டும் என்றாலும் இந்த மெட்டோசிஸ் துணையிருக்கு! எப்பவாவது ஒரு தவறு நடக்கும். ஆம் millionல் ஒன்று. அப்படி நடந்தால்,   Awesome auto-correcter திருத்திக்கொள்ளும்.

Again, their policy: Give one; Take two.

எங்க தொலைஞ்சுருமோ, கிழிஞ்சுருமோ, பழசாகிடுமோன்னு மூட்ட மூட்டயா பல செட் எடுத்தாச்சு. இப்ப என்கிட்ட கோடிகோடியான செட் தயார்.

Boring books – repeated pages

எந்த மூட்டைய பிரிச்சாலும் அதே 23+23 புத்தகங்கள் தான்.
அதே கதைகள், அதே வரிசையில்..

யாராவது புதுசா ஒரு ஆளு இந்த புத்தக மூட்டைய படிச்சாரு, அவ்வளவுதான். என்னடா இது ஒரே repeated books, repeated stories.

Yes, Mitosis  copier is universe’s best copier and it’s work is replica as of the original input.

Meiosis Engineers & co. – Universe’s best recombinator

ஒரு நாள் வீட்டுக்கு ஒரு Google Home Robot கூட்டிவந்தாச்சு. அது கொஞ்சம் புத்திசாலி. கொஞ்சம் சாமர்த்தியமும் கூட. நான் என்ன சொன்னாலும் கேட்கும். தூக்கம் வரல, ஏதாவது கதை சொல்லுனா கற்பனையா ஒரு கதைசொல்லி தூங்க வைக்கும்.

திடீர்னு ஒரு யோசனை. ஏதோ கதையை கேக்குறதுக்கு நம்ம கதையை அசை போட்டா? அத்தனை மூட்டைகளையும் படிக்க சொன்னேன்.
திரும்ப திரும்ப ஒரே வரிசையில, ஒரே கதைகளை படிச்சதுல கதை சொல்லி கூகிளே கடுப்பாயிடுச்சு.

Story shuffler  – Renowned Recombination

எவ்வளவு தடவை தான் ஒரே மாதிரி Xerox copy எடுக்குறது. Robotஆ இருந்தாலும் படிச்சு படிச்சு அலுத்துறாது? கதை கேட்டு கேட்டு காது காண்டாவாது? அதனால அதிக கவன ஈர்ப்புக்காக ஒரு புது வழி.

Meiosis என்ன செய்துனா, வழக்கம்போல் முதல்ல ஒரு Xerox copy. ஒன்ன ரெண்டாக்கு.

Crossing Over

அப்புறம் ஒரு புதுமை. சின்னதா, ஒரு கொடுக்கல்/வாங்கல். அதாவது இரண்டு புத்தகத்தயும் இரண்டா கிழி, ஒரே இடத்துல. மறுபடியும் சொல்றேன், ரெண்டா கிழிக்கனும், பாதியா இல்ல.அது எங்கே வேண்டுமென்றாலும், 210வது கதையோ, 467வது கதையோ. அம்மா புத்தகதோட முதல் பகுதியையும் , அப்பா புத்தகதோட மீதி பகுதியையும் சேர்த்து ஒரு புது புத்தகம் தயார்.

சரி ஒரு உதாரணமா, இப்ப அந்த 16வது புத்தகத்தை எடு. இரண்டு பக்கத்துல இருந்தும். மொத்தம் 90கதைகள். முதல் 53, அம்மா புத்தகத்துல எடு. மீதி 37ஐ (90 – 53) அப்பா புத்தகத்துல எடு. இப்ப ஒரு புத்தம் புது தொகுப்பு தயார்.

சில சமயம் கொடுக்கல்/வாங்கல் இரண்டா கிழிக்காம, மூணா கூட நடக்கும்.

இது இப்ப புது கலவை.  அதே போல அம்மா புத்தகத்து மீதியும் அப்பா புத்தகத்து முதலும் சேர்ந்து இன்னொரு கலவை. இப்ப மொத்தம் இரண்டு புத்தகங்கள், புது (Crossing) கலவை!

அப்புறம் முதல்ல Xerox போட்டப்ப ரெண்டு நகல் இருந்துச்சுல, அந்த இரண்டாவதுலையும் இதே கொடுக்கல்/வாங்கல். இன்னொரு கலவை(இரண்டு புத்தகங்கள்).

இந்த நாலும் தனித்தனியானது; ஆனாலும் நெருங்கிய தொடர்புடையது. நாலுமே ரெண்டு Original புத்தகத்திலிருந்து கதைகளை கடத்திவரும். ஆனாலும் வேற வேற கதைகள்;வேற வேற Content; வேற வேற வரிகள்.

இப்ப ஆக மொத்தம் நான்கு புத்தகங்கள்! புத்தம் புது கலவை!

புத்தகங்கள் இப்ப அலுப்பு தட்டல. முன்ன விட அதிக சுவை. ஈர்ப்பும் அதிகம்.

சுருக்கமா சொல்லனும்னா Mutual exchange between the books. Sharing stories to add more flavors/colors to the original copy!

Independent assortment – Mix the colors

அவ்வளவு தானா? இல்ல; இன்னும் ஒரு புதுமை. பழைய Mitosis  copierக்கு ஒரு மூட்ட கொடுப்போம் (உள்ள அம்மாவோடது 23 , அப்பாவோடது 23ன்னு 46 புத்தகம்). அது அப்படியே நகல் எடுத்து ரெண்டு மூட்டை தரும். இரண்டுலையும் 46 புத்தகம் இருக்கும். ஒரு மூட்ட தொலைந்தாலும் கவலையில்லை.

இந்த புது Meiosis இயந்திரம் என்ன செய்யுதுனா, தயாரானா 4 புத்தகத்தையும் நாலு மூட்டையில போடுது.

ஒருமுறை தயாரான ஒரு புத்தகத்தை 4 மூட்டையில எந்த மூட்டையில வேண்டும்னாலும் இடப்படும். அதாவது கணிக்கமுடியாது. RANDOM assortment. Mixing the order! இப்படியே 23 புத்தகத்துக்கும். இப்ப ஒவ்வொன்னும் ஒரு தனித்துவமான மூட்டை. ஒரு மூட்ட தொலைந்தாலும் திரும்ப,அந்த கலவை கிடைக்காது.

And their Policy – Give 1 ; Take 4

இதுல அழகு என்னான்னா, Meiosis இயந்திரம் கொடுக்குற அந்த மூட்ட ஒவ்வொன்னும் எவ்வளவு தனித்துவம்னு கணக்கு போட்டா தலை சுத்தும்! ஆமா , 2^23 அதாவது 8388608 வாய்ப்பில் ஒன்று!

 

Reading Together – Beauty of Unity

எவ்வளவு நாள்தான், Google Robotக்கிட்ட கதை கேட்கிறது? எனக்கும் ஒரு துணை கிடைச்சது, கதைகள் பேச!

புத்தக்ங்கள் தான் எங்களுக்குள்ளான பரிசுகள். Bore அடிக்குற Mitosis  புத்தகங்கள் no.. no … a big No… அதை நான் என் தேவைக்கே பாதுகாத்துக்கிறேன்! தனித்துவமான Meiosis புத்தகங்கள் தான் என் தேர்வு! என் ஒரே ஒரு பரிசு மூட்டை படித்தால் போதும். என்னை பற்றி புரிந்துகொள்ள. துணைக்கும் அப்படித்தான். துணையுடைய ஒரே ஒரு மூட்டை படிச்சா போதும், முழு புரிதல் கிடைத்துவிடும்.

Gift for my kid (1 in 70 trillion)

நாளை என் பிள்ளையும் ஒரு பயணம் மேற்கொள்வாள். அப்பொழுதும் அதே 23+23 என்று தான் விதிமுறை இருக்கும். எனக்கு கிடைத்துபோல், நானும் துணையும் அவளின் பயணத்துக்கான 2 பெட்டிகளை பரிசளிப்போம்! அவளுக்கே அவளுக்கான தனித்துவமான தன் 23+23, 46களுடன் புதியதோர் உலகம் நோக்கி!

பிள்ளைக்கு கிடைக்கும் அந்த பரிசின் தனித்துவம் அலாதியானது! இந்த உலகில் இதற்கு முன் யாருக்கும் கிடைக்காதது! இனி ஒருமுறையும் யாருக்கும் கிடைக்காதது!

ஆம் கணக்கிட்டால்  (2^23) * (2^23) அதாவது 70,368,744,177,664 வாய்ப்பில் ஒன்று!  இதுவரை தோன்றி மறைந்த மனித இனத்தின் கூட்டுத் தொகைக்கும் அதிகமானது! அவள் அத்துனை தனித்துவமானவள்

Love you my kid ❤️‍! பயணங்கள் தொடரட்டும்.

 

Index over the stories

Book
#
Stories
(Genes)
Length
(Base pairs
(m))
Read
(Determined)
1 3000 240 ~90%
2 2500 240 ~95%
3 1900 200 ~95%
4 1600 190 ~95%
5 1700 180 95%
6 1900 170 95%
7 1800 150 95%
8 1400 140 95%
9 1400 130 85%
10 1400 130 95%
11 2000 130 95%
12 1600 130 95%
13 800 110 80%
14 1200 100 80%
15 1200 100 80%
16 1300 90 85%
17 1600 80 95%
18 600 70 95%
19 1700 60 85%
20 900 60 90%
21 400 40 70%
22 800 40 70%
X 1400 150 95%
Y 200 50 50%

Read more : Genes and Disease from National Center for Biotechnology Information (US) https://www.ncbi.nlm.nih.gov/books/NBK22183/pdf/Bookshelf_NBK22183.pdf

 

This entry was posted in movie, technology, travel and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


three + = 6